அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா : குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது

நாமக்கல் : வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது பள்ளியில் அப்பகுதியை சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியின் ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் பொறுப்பு பூங்கொடி தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.மேலும் பள்ளி குழந்தைகள் கிராமியப் பாடலுக்கு தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு நடனமாடியது அங்குள்ள பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது மற்றும் சினிமா பாடலுக்கு குழந்தைகள் அசத்தலாக நடனம் ஆடினர், தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. அரசு பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி அப்பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளின் நடனத்தை கண்டு களித்து ரசித்தனர்.