சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்றம்
LOGI
1 year ago

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி., குழு பரிந்துரைத்துள்ளது.பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி ) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக "பாரத்" என்று மாற்ற பரிந்துரை வழங்கி உள்ளது.என்.சி.இ.ஆர்.டி இன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் இனி பாரத் என்ற வார்த்தையே இடம் பெறும். மேலும் பாட புத்தகங்களில் ஹிந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.