மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தல்: ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் விதிகளின்படி ஆணைய இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில்; “3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளை அதே நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யக் கூடாது தேர்தல் விதிகளின்படி ஆணைய இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மாவட்டத்திற்கு வெளியே மாற்றப்பட்ட அதிகாரிகள் தொகுதிக்குள் பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.