மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்த நாள் விழா புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் தலைமையில் போயஸ் கார்டன் இல்லத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்: போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதா என பெயர் வைக்கப்பட்டது

அம்மா’, 'புரட்சி தலைவி' என்று அன்புடன் அழைக்கப்படும் செல்வி ஜெயலலிதாவின் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. "ஜெ.ஜெயலலிதா எனும் நான்" இந்த வாசகத்தைக் கேட்டாலே மெய் சிலிர்க்கும். இவரின் கம்பீர குரலையும், ஆளுமையையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற அவரின் வாக்கியத்திற்கு ஏற்ப மக்களின் முதல்வராகவே வாழ்ந்து மறைந்தவர் செல்வி ஜெயலலிதா. நடிகரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டியாக இருந்து, அவரை அரசியலில் அறிமுகப்படுத்தினார். இவர் 1982-இல் அ.தி.மு.க வில் இணைந்தார். பின் 1984-இல் ராஜ்யசபா உறுப்பினரானார். 1991-இல், தனது 43-ஆவது வயதில் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். இவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகள், மதுவிலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடையெனப் பலவிதமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினார். பெண்களைக் காவல்துறையில் சேரவும் ஊக்குவித்தார். ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவிலேயே, தனது மாநில மக்களின் நலனுக்காக சிறந்த இலவச திட்டங்கள் அறிவிப்பதில் முதன்மையானவர் செல்வி ஜெயலலிதா. பெண்களை மையப்படுத்திப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் அவரின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன. அதிகத் திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததும் இவர் தான். தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா லேப்டாப், அம்மா குடிநீர், அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள், அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் ஃபேன், அம்மா காப்பீடு, அம்மா பார்மஸி, தாய்ப்பாலூட்டுவதற்கு தனி அறை போன்ற எண்ணற்ற நல திட்டங்களைச் செயல்படுத்தியவர். இன்றும் அவர் தொடங்கிய அம்மா உணவகத் திட்டம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.