தமிழகம் முழுவதும் 17 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

Admin 1 year ago

சென்னை: மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் போலீஸார் பணியிடம் மாற்றப்பட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். படிப்படியாக இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் பி.வரதராஜன், எம்.கே.பி. நகருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி உட் கோட்ட டிஎஸ்பி சஃபியுல்லா சென்னை அண்ணா நகர் சரக உதவி ஆணையராகவும், திருச்சி கண்டோன்மென்ட் சரக உதவி ஆணையர் எல்.பாஸ்கர் புதுக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மொத்தம் 17 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்