கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேல் அவர்களின் தொகுப்பு

கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எல்.தங்கவேல் (66) அறிவிக்கப்பட்டுள்ளார். கரூர் செங்குந்தபுரம் காமராஜபுரம் வடக்கு திருநகரைச் சேர்ந்த எல்.தங்கவேல், பியுசி முடித்துள்ளார். இவரது தந்தை எம்.லட்சுமண கவுண்டர். ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி தொழில் மற்றும் விவசாயம் செய்து வரும் தங்கவேல், அதிமுகவில் தற்போது எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளராக உள்ளார்.உயர்கல்வி படிக்கும் மாணாக்கர்களில், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் பெற நடவடிக்கை. 9லட்சத்து 69ஆயிரம் கல்லூரி மாணாக்கர்கள் இணைய வழி வகுப்பில் கலந்து கொள்ள இலவசமாக நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா. பொதுமக்கள் தங்கள் குறைகளை 24மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் 1100 என்ற முதலமைச்சரின் உதவி மையம். புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம். 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாகவும், ஆயிரத்து 79 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும், 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்வு. 32புள்ளி 9 சதவீதமாக இருந்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை 49 சதவீதமாக உயர்வு. சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் 848கோடியே 88லட்சம் ரூபாய் செலவில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் என அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய அதிமுக வில் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எல்.தங்கவேல் (66) அறிவிக்கப்பட்டுள்ளார்.