‘விவிபாட்’ கருவி மூலம் வாக்களித்த சின்னத்தை 7 விநாடிகள் பார்க்கலாம்!

VARAHAN 1 year ago

பழநி: வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசையாக அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அருகில் இருக்கும் சிறிய பட்டனை அழுத்த வேண்டும். பட்டனை அழுத்தியதும் சிவப்பு விளக்கு எரிவதுடன், ‘பீப்என ஒலிஒலிக்கும். அதுதான் வாக்குப்பதிவு செய்ததற்கான குறியீடு. மேலும், வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் அருகில் விவிபாட் கருவி வைக்கப்பட்டிருக்கும். அதில் வாக்காளர்கள் வாக்களித்த சின்னம் சிறிய திரையில் 7 விநாடிகள் வரை தெரியும். அதன் பின்னர், அந்த காகிதம் தானாகவே துண்டித்து உள்ளே விழுந்து விடும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தேர்தல் அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் அதி காரிகள் தெரிவித்தனர்.

 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்