தவெக தலைவர் விஜய் அவர்கள் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்

Logesh 10 months ago

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கடந்த நவம்பர் 30 அன்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தவெக தொண்டர்கள் செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர்.இதன் தொடர்ச்சியாக, நேற்று (டிச.4) சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பத்தினரை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. திமுக, அதிமுக, பாஜக என முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ போல தன்னுடைய இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களை இழுத்தடிப்பது நியாயமா என்ற குரல்கள் எழுந்தன. சில விஜய் ரசிகர்களே கூட இந்த விஷயத்தில் விஜய் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தவும் செய்தனர்.வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு விஜய் நேரில் சென்றால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்றும், வேண்டுமென்றே மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்களை செட் செய்து பிரச்சினை செய்யலாம் என்று பலவகையான சமாளிப்பு கருத்துகளை தவெக தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.கூட்டம் கூடும், பிரச்சினை ஏற்படும் என்ற இதே காரணத்தை விஜய்யால் தேர்தல் காலத்தில் சொல்ல முடியுமா? பிரச்சாரத்தை இதேபோல தன்னுடைய அலுவலகத்தில் மட்டுமே வைத்து நடத்த முடியுமா என்ற எதிர்வினைகளும் எழாமல் இல்லை.தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தற்போதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பேரிடரோ அல்லது பிரச்சினையோ மக்களை நேரடியாக சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்படி தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து எப்போதும் ஆறுதல் கூறியதில்லை.என்று அரசியல் தரப்பும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்