முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்கள் 100 வது பிறந்தநாள் விழா : தமிழக மக்கள் கழகம் தலைவர் காகனம் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை

Admin 2 months ago

இன்று பிறந்த நாள் காணும் இடது கம்யூனிஸ்ட் தலைவர் முதுபெரும் தலைவர்,கரைபடாத கரம் எளிமையின் சிகரம் இரண்டாவது கருப்பு சிங்கம் (காமராஜர்)(ஜயா.அப்துலுல்கலாம்)சுயநலம் கருதாமல்தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்கள் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்வோம் 


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்