புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா: புரட்சித் தாய் சின்னம்மா பாசறை சார்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பேனர் வைக்கப்பட்டது
நாமக்கல் : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் நிறுவனர் டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் கட்சியின் சார்பில் நிர்வாகிகளும் கொண்டாட உள்ளனர் அதன் சார்பில் மேன்மை மிகு புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் தலைமையில் கிழ் இயங்கும் புரட்சித் தாய் சின்னம்மா பாசறை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மாநில தலைவர் ஜெயபாண்டி மாநில செயலாளர் முத்தீஸ்வரன் மாநில பொருளாளர் குமார் மாநில இணை செயலாளர் தென்காசி சுரேஷ் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் மனோகர் தலைமையில் எம் ஜி ஆர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதனுடன் ஒன்றிய செயலாளர் சேந்தமங்கலம் புண்ணிய தேவன் அவர்களும் உடனிருந்து செயல்பட்டனர்