இலங்கை கடற்படையினரால் எல்லைத் தாண்டி மீன் பிடிக்க சென்றதால் ராமேசுவரம் மீனவர்கள் 34 பேர் கைது

Logesh 1 month ago

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள் அனுமதிச் சீட்டு பெற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை வடக்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளை, இலங்கைக் கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி, படகுகளில் இருந்த ரூபில்டன், கிறிஸ்டோபர், ஜான், ரீகன், பாலாஜி, இன்னாசி, கிரின்சன், நம்பு மணி, செந்தில் குமார், சார்லஸ் மிரண்டா, டேனியல், ஆகாஷ், வின்ஸ்டன், அண்ணாதுரை, ஸ்டாலின், முகமது ஷெடின், சீனிவாசன், ஸ்டெல்லஸ், செந்தூர் பாண்டி, ஏனோக், ஜெயபால், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை, சிவசங்கர், குணசேகரன், முத்து, அபிஸ்டன், சந்தோஷ், ரேமிஸ்டன், மேக்மில்லன், ஆரோக்கிய ஜோபினர், அகரின் ஆகிய 34 மீனவர்களை கைது செய்தனர். மேலும், விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரணை தீவில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 படகுகளையும், 34 மீனவர்களையும் அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 34 தமிழக மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்