தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் விருப்பம் : பட்டியல் இனத்தவர் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று கூறினார்

கடலூர்: ‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் சார்பில் சுவாமி சகஜானந்தாவின் 135-ம் ஆண்டு பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது:இந்த மண் சிவன் பிறந்த மண். சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் இரண்டு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி. கார்ல்டுவெல் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம், இந்திய கலாச்சாரத்தை முழுமையாக சீர்குலைத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும் என்று கார்ல்டுவெல் கூறினார் அதனால் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்துக்கு மாற்ற முனைந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம்? அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது? என்று ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன்மூலம் சீர்குலைக்க தங்களது பணியை தொடங்கினார்கள். எத்தனை கல்விக் கூடங்கள் இருக்கின்றன? அதில் எந்தெந்த சமூகத்தினர் படிக்கிறார்கள்? என்று கணக்கெடுத்தார்கள். மகாத்மா காந்தி, ‘பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன்பு அழகான மரமாக இருந்தோம், நீங்கள் வந்த பிறகுதான் கிளைகளை அழித்து விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார்