ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது இளைஞர் மரணம்

Logesh 1 month ago

நாமக்கல்: குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனுர் பகுதியில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆத்தூர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரின் 23 வயது மகன் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற வீரர் தொண்டைப் பகுதியில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி தாமஸ் ஆல்வா எடிசன் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாமஸ் ஆல்வா எடிசனின் தொண்டை பகுதியில் காளை முட்டிய நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்குவதாகவும் விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்