கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஜெயபிரகாஷ் அவர்களின் தொகுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.ஜெயபிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: வி.ஜெயபிரகாஷ் | வயது: 58, பிறந்த தேதி: 25.05.1965. | கல்வித் தகுதி: எம்ஏ., எல்எல்பி | தொழில்: கிரானைட், டிரான்ஸ்போர்ட் | ஊர்: ஓசூர். | கட்சிப்பதவி: கடந்த 2011-ம் ஆண்டு பாமகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார். உள்ளாட்சிப் பதவி: தற்போது ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவராகவும் உள்ளார். மேலும், ஏற்கெனவே ஒரு முறை நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர். | குடும்பம்: மனைவி சந்தியாராணி, மகன் நவரத்தன, மகள் நவரஞ்சனி.பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் 3லட்சத்து 32ஆயிரத்து 460 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 45லட்சத்து 77ஆயிரத்து 484 மகளிருக்கு, 81ஆயிரத்து 52 கோடி ரூபாய் கடன் உதவி. உழைக்கும் மகளிருக்கு 25ஆயிரம் மானியத்துடன் 2லட்சத்து 85ஆயிரம் அம்மா இருசக்கர வாகனங்கள் 740 கோடி ரூபாய் மானியம். பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதங்களாக இருந்தது 9 மாதங்களாக உயர்த்தி அறிவிப்பு உள்ளிட்டவைகளை பட்டியலிட்டுள்ளனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு..பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 9ஆயிரத்து 827 கோடி ரூபாய் இழப்பீடு. 52லட்சத்து 31ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு 7ஆயிரத்து 322 கோடி ரூபாய் செலவில் மடிக்கணினி வசங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.