நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் அவர்களின் தொகுப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சுர்ஜித் சங்கர் (46) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் தலைஞாயிறு. பெற்றோர் ஞானசிகாமணி - மணிமேகலை. இருவரும் சத்துணவு அமைப்பாளர்கள். எம்எஸ்டபிள்யூ, பிஎச்.டி படித்துள்ளார். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார். முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய இவர், கடந்த மாதம்தான் அதிமுகவில் இணைந்தார். தற்போது ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக உள்ளார். அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்தது . 50ஆண்டு கால காவேரி பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்த குழு அமைப்பு அமைத்தது. விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு . குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஆயிரத்து 132 கோடி ரூபாயில் 5ஆயிரத்து 586 நீர் நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். 12லட்சத்து 51ஆயிரம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக ஒரு சவரன் தாலிக்கு தங்கத்துடன் 50ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்ற பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.