நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணி அவர்களின் தொகுப்பு

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கட்சியின் வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் சு.தமிழ் மணி அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: சு.தமிழ்மணி, வயது: 64 | கல்வித் தகுதி: எம்.எஸ்.சி., ( வேளாண்மை ) | ஊர்: பரமத்தி. | தொழில்: கடந்த 1984-ம் ஆண்டு முதல் பத்தாண்டுகள் தமிழக அரசின் வேளாண்மைத் துறை பணி. 1993-ம் ஆண்டு முதல் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறையில் சுய தொழில் முனைவோர். கட்சி பதவி: வர்த்தக அணி மாவட்டச் செயலாளர். குடும்பம்: மனைவி சுகுமதி, மகன் திலீபன், மகள் யாழினி. விவசாயிகளின் 100ஆண்டுகால கோரிக்கையான காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் 14ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதே போல் விவசாயிகளின் 60 ஆண்டு காலகனவுத் திட்டமான அத்திக்கடவு – அவினாசித் திட்டம் ஆயிரத்து 652 கோடியில் செயல்படுத்தப்பட்டு, 24ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கிடைக்க வழிவகை. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு. கொரோனா ஊரடங்கு காலத்தில் 2கோடியே 1 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் நான்கு மாதங்களுக்கு விலையில்லாமல் அத்தியாவசியப் பொருட்கள். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கொரோனா நிதியுதவியாக ஆயிரம் ரூபாய். அம்மா உணவகங்கள் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் 2கோடியே 97 லட்சம் மக்களுக்கு விலையில்லா உணவு ஆகிய திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியது.