விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் அவர்களின் தொகுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் (தனி) அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் போட்டியிடுகிறார். 41 வயதாகும் இவர், விழுப்புரம் அருகே காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 1982-ம் வருடம் மே 25-ம் தேதி பிறந்த இவர், பிஎஸ்சி பட்டதாரி ஆவார். சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் மெயின்டனன்ஸ் பணியின் ஒப்பந்ததாராக உள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளார். இவர் தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றி, பின்னர் அதிமுகவில் இணைந்தார். விழுப்புரம் தொகுதியில் களம் காணும் பாக்கியராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரான குமர குருவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.ஏழை-எளிய மக்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க 2ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள்.100 வறண்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் நிரப்பும் திட்டம் 565கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, 4ஆயிரத்து 238 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி. 2லட்சத்து 38ஆயிரம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து விலையில்லா மின்சாரம். முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தொகை 2லட்சம் ரூபாயிலிருந்து 5லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 50 லட்சம் நோயாளிகள் பயன். மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தொகையானது 2ஆயிரத்திலிருந்து 5ஆயிரமாக உயர்வு. மீன்பிடி குறைந்த காலத்தில் 4லட்சத்து 94ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு 247 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு னால திட்டங்களை மக்களுக்காக அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.