காவிரி ஆற்றின் ரசாயன நீர் கலப்படம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது: பள்ளிப்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் கடும் எச்சரிக்கை

நாமக்கல் : பள்ளிப் பாளையம் உள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் சட்ட விரோதமாகத்தான் சாயப்பட்டறைகள் செயல்படுகிறது வெளிப்படையாக பேசிய மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி..!சுத்திகரிக்கப்படாமல் சாயத்தண்ணீரை வெளியேற்றினால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை..!கோட்டாட்சியர் எச்சரிக்கையும் மீறி இரவில் சுத்திகரிக்கப்படாத சாய நீரை வெளியேற்றிய சாயத் தொழிற்சாலை..!கடந்த சில மாதங்களாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த பெரியார் நகர்,ஈ.ஆர் தியேட்டர், வசந்தா நகர் ஆகிய பகுதிகள் உள்ள சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் சாய நீரை வெளியேற்றியதனால் அப்பகுதி முழுவதும் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்தது வீட்டு போர்களில் சாயத்த தண்ணீர் கலந்ததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்திகள் வந்தன, மேலும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவும் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் சாயப்பட்டறை உரிமையாளருடன் சாய பிரச்சனைகள் குறித்து அதை தடுக்கும் விதமாக கலந்தாய்வுக் கூட்டம் பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில்-14 துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர் .அப்போது பேசிய மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் 158 சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாகவும், அதில் பல்வேறு புகார்களைத் தொடர்ந்து 28 சாயப்பட்டர்களுக்கு சீல் வைத்து மூடப்பட்டதாகவும் கூறினார்.அப்படி மூடப்பட்ட சாயப்பட்டறைகள் சட்டவிரோதமாக இரவு முழுவதும் ஜெனரேட்டரை வைத்து இயக்குவதால் அவர்கள் சாய தண்ணீரை அப்படியே திறந்து விடப்பட்டு அது நேரடியாக கால்வாய் மூலம் காவிரி ஆற்றில் கலக்கிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து சட்ட விரோதமான சாயப்பட்டறைகள் இவ்வாறு செய்வதால் நிலத்தடி நீர் மற்றும் காவிரி ஆறு மாசடைவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும், சில சாயப்பட்டறைகள் சாலையின் வழியாக பைப் அமைத்து காவிரி ஆற்றில் சாயத்தன்னிறை கலந்து வருவதாகவும் இதனால் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இனிவரும் நாட்களில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்றார்.மேலும் குமாரபாளையம் பகுதிகளில் அனுமதி இல்லாத சாயபட்டறைகள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதி விரைவாக அந்த சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளதாகவும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து பேசிய வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பெரிதளவு பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து சாயப்பட்டறைகள் சட்டவிராதமாக செயல்பட்டால் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என்றும் சுத்திகரிப்பு செய்யாமல் சாய நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாய ஆளை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.சாயப்பட்டறை உரிமையாளருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு இனி வரும் நாட்களில் சாயப்பட்டறைகள் முறையாக இயங்க வேண்டும் என எச்சரிக்கை செய்து அறிவுறுத்தியும் அன்று இரவே சுத்திகரிக்கப்படாத சாய நீர் வெளியேறி காவிரி ஆற்றில் கலந்ததுதான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது .