கொங்கு விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் பிற கட்சிகள் இணைந்து பள்ளிப் பாளையம் சாயப்பட்டறை கழிவு காவேரி நீரில் கலக்கபடுவதால் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Arumugam 3 months ago

பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள்(  புற்றுநோயால் படுக்கையில் இருக்கும்  நோயாளி போலவும் சாய தண்ணீர் நிறைந்த பாட்டிலுடன்) நூதன முறையில் சாயப்பட்டறைகளை மூடக்கோரி போராட்டம்..!இப்பகுதியில் செயல்படும் சட்டவிரோத சாய ஆலைகளை  மூடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு..!நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஈ.ஆர் தியேட்டர், வசந்தா நகர், பெரியார் நகர், காவிரி ஆர் எஸ் ஆகிய பகுதிகளில் சாய ஆலைகளால் கடந்த சில மாதங்களாக  பொதுமக்கள் பல்வேறுகளை இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.மேலும் இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட ஆலைகள் சாய நீரை சுத்திகரிக்கப்படாமல் கால்வாய் வழியே விடுவதால் நிலத்தடி நீர் மற்றும் காவிரி ஆறு மாசடைந்து தண்ணீரை உபயோகிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த சாய பட்டறை ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் சாயப்பட்டறை உரிமையாளருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் .ஆனாலும் அன்று இரவே சாயப்பட்டறை ஆலைகள் சாயத்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் கால்வாயில் கலந்ததால் இதனைத் தொடர்ந்து கொந்தளிப்பு அடைந்த அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வசந்தா நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சுத்திகரிக்கப்படாத சாய நீரை அருந்துவதால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி படுக்கையில் படுத்திருப்பது போலவும், சாய தண்ணீர் நிறைந்த வாட்டர் கேனுடன் கோஷங்கள் இட்டு பொதுமக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சட்டவிரோதமாக செயல்படும் சாய ஆலைகளை மூடவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்