டால்பின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இன்டர்நேஷனல் கராத்தே அலையன்ஸ் கியா குஷின் ரியோ நடத்திய கராத்தே மற்றும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Subramanian 2 months ago

நாமக்கல் :  பள்ளிபாளையம் சனி சந்தை பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடல் டால்பின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இன்டர்நேஷனல் கராத்தே அலையன்ஸ் கியா குஷின் ரியோ நடத்திய கராத்தே மற்றும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இதில் சிறுவர் சிறுமியர் என 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியும் ஒரு மணி நேரம் கராத்தே பயிற்சியும் செய்து ஜெட்லி புக் ஆப் ரெகார்ட் இடம் பெற்றனர் .இதில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட் டிராகன் ஜெட்லி கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார். டால்வபின் முனியப்பன் தலைமையில் அனைவரும் கோப்பை சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நகர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் பாலமுருகன்,வார்டு தலைவர் சசிகுமார் மற்றும் சாந்தி என பலரும் கலந்து கொண்டனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்