பள்ளிபாளையம் புதிய காவிரி ஆற்று பாலம் அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆறுமுகம் 2 months ago

ஈரோடு : பவானி வட்டம் ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் பெட்டி தேய்க்கும் தொழிலாளி அப்புசாமி செந்தாமரையின் மகன் சத்யானந்த் வயது 28 இவர் ஏசி மெக்கானிக்காக ஈரோட்டில் பணியாற்றி வந்தார் இந்நிலையில் நேற்றிரவு பள்ளிபாளையத்தில் பணிகளை முடித்துவிட்டு ஈரோடு நோக்கி செல்வதற்காக சத்தியானந்த் தனது நண்பருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, பள்ளிபாளையம் புதிய காவிரி ஆற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, காவிரி ஆற்று புது பாலத்தின் மேலே அமைக்கப்பட்டு இருந்தவேகத்தடை சரிவர தெரியாததால் வேகமாக வந்த சக்தியானந்த் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.இந்நிலையில் வேகத்தடை சரிவர தெரியாததால் சத்யானந்த் உயிரிழந்ததாகவும், இதற்கு போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் காவிரி ஆற்று புது பாலத்தினருகே இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் சத்யானந்தரின் உறவினர்கள் ஈடுபட்டனர் .இதன் காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நின்றது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிபாளையம் போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். வேகத்தடைக்கு தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக பணிக்கு செல்லும் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அவதிக்கு உள்ளாகினர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்