தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைக் காவலர்கள் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பு சார்பாக , சமத்துவப் பொங்கல் விழா கடலூர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு : இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைக் காவலர்கள் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பு சார்பாக , சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் கடலூர் ஏ. பெருமாள் தலைமை தாங்கினார்.மாநில கூட்டமைப்பு தலைவர் மதுரை எம். செல்வம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஏ. தனுசு, திருவா தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதி பாபு, சுசீலா வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், பார்வதி காளி, கடலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மகாதேவன், சத்துணவு அமைப்பாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இலத்தூர் ஒன்றிய செயலாளர் சாந்தி இராமச்சந்திரன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சித்ரா இராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொங்கல் படையலிட்டு வணங்கினர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற இந்த விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் துளசி, வெங்கடேசன், செல்வராஜ், சிவா, நாகூரான், ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முருகேசன், சுகுமார், மனோகரன், வெங்கடேசன், சண்முகம், கெங்காதரன், அலமேலு, சுரேகா, ஜெயகாந்தி, குமாரி, ஜீவா, கலா, சரசு, சத்யா, மகாலட்சுமி, லட்சுமி மற்றும் சுற்றுப் புற கிராமங்களைச் சேர்ந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது, முடிவில் ஒன்றிய நிர்வாகிகள் எல்.சாலமன், சி.எம்.மாரியப்பன் நன்றி கூறினர்.