பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், பின்வரும் உறுதிமொழிகளை உளப்பூர்வமாய் ஏற்போமாக
மிழகத்தில் உள்ள, ஏழை எளிய மக்களின், வாழ்வில் ஒளியேற்றிட, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அனைவருடைய இதயங்களிலும், நிரந்தரமாய் குடிகொண்டு இருக்கும், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் வண்ணம் அவர் கட்டிக்காத்த கொள்கைகளையும். நமக்கு உருவாக்கி தந்த சட்ட திட்ட விதிகளையும், அடிபிறழாமல் கடைபிடித்து, கழகத்திற்கு, விசுவாசமிக்க தொண்டர்களாக, துரோகத்தை வேரறுக்கும் வீரர்களாக, புரட்சித் தலைவர் அவர்களின், புகழ் பாடும் கழக உடன்பிறப்புகளாய், பணியாற்றிடவும் இந்நாளில் உறுதி ஏற்போம். நம் புரட்சித்தலைவர் அவர்கள், எந்த சூழ்நிலையில், எந்த நோக்கத்திற்காக, இந்த இயக்கத்தை உருவாக்கினார் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நினைத்து, அவரது எண்ணம் ஈடேர, அவர் கண்ட கனவு நனவாக, இந்த பொன்விழா ஆண்டில் உறுதி ஏற்போம். நம் புரட்சித்தலைவரும், நம் புரட்சித்தலைவியும், கற்று கொடுத்த பாடங்களை, எந்நாளும் மறக்காமல், அதே நெறி முறைகளை பின்பற்றி, தன்னலமின்றி செயலாற்றி, எதிரிகளின் சூழ்ச்சிகளை வோறுத்து, வென்றிடுவோம் என்று உறுதி ஏற்போம். நம் புரட்சித்தலைவரையும், நம் புரட்சித்தலைவியையும், தனது உயிர் மூச்சாக எண்ணி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கும். கோடான கோடி, கழகத் தொண்டர்களின் எண்ணம் ஈடேறவும், கழகம் மீண்டும் தலை நிமிரவும், ஒன்று படுவோம். வென்று காட்டுவோம். தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும். தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பாதுகாத்திடவும், நாம் அனைவரும், நம் வாழ்நாள் முழுவதையும், அர்பணிப்போம். அயராது உழைப்போம்.