இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் வாக்காளர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு வாக்களிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை,: இந்தியாவின் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் தேர்தல்
என்பதால் வாக்காளர்கள் பொறுப்புணர்வோடு
செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டில் இதுவரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களிலேயே மிகமிக
முக்கியத்துவம் வாய்ந்த
தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. இது
இந்தியாவின் எதிர்காலத்தையும்,
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப்
போகிற தேர்தலாகும். இந்தியாவில்
ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா, சர்வாதிகாரம் நீடிக்கப்
போகிறதா என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில், கொடுத்த வாக்குறுதிகள் எதையும்
நிறைவேற்றவில்லை. அதற்கு
மாறாக, மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலின்
மூலம் வாக்கு வங்கியை உருவாக்கி பாஜ வெற்றி பெற்று வருகிறது. ஆனால், பாஜ ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே,
இந்தியா முழுவதும் பாஜ எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில்
எதிர்பார்த்த வெற்றி
கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழ்நாட்டில் தேர்தல்
பிரசாரம் நிகழ்த்த வேண்டிய பலகீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால்,
இந்தியாவிலேயே தமிழகத்தில்
தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகியிருக்கிறது. எனவே,
இந்தியாவின் ஒளிமயமான
எதிர்காலத்தை உருவாக்க,
இந்திய அரசமைப்புச் சட்டத்தை
பாதுகாக்க, மோடியின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திட, இந்தியா கூட்டணி தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்திட, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி
அமைந்திட காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி
பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர்கள் அளிக்கிற
ஒவ்வொரு வாக்கும், 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் என்கிற
பொறுப்புணர்வோடு அளிக்க
வலியுறுத்துகிறேன்.