புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் தமிழகத்தில் நிமுகவினர் தொடர்ந்து செய்து வரும் அராஜகங்களுக்கும், அத்துமீறல்களுக்கும் கடும்ண்டனம்

LOGESH 1 year ago

திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள் அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது .மேலும் பொதுமக்கள் நிம்மதி இழந்து வேதனையால் தவிக்கிறார்கள். நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் புரட்சிப் பயணம் மேற்கொண்டு போது கூட திமுகவினரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தி இருந்தேன். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த மில்ரோசாப்பூரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்று திமுகவை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா  நிறுவன நிர்வாகிகளை திட்டி கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதனை பார்த்து தமிழக மக்களும் தமிழகத்தை நம்பி தொழில் செய்து கொண்டிருக்கும் தொழில் நிறுவனத்தினரும் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள். அதே போன்று தென்காசி மாவட்டம் பெருமான் பட்டி பஞ்சாயத்து தலைவர் குருவம்மாளின் கணவர் காளிராஜ் வேலாயுதபுரத்தில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியரிடம் மிரட்டல் விடுக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அனைவராலும் பார்க்க முடிந்தது .மேலும் மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் என்பவர் ஒப்பந்ததாரர்களிடம் தனக்கு கமிஷன் தர வேண்டும் என்று மிகவும் ஆதங்கப்பட்டு பேசுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நாடே பார்க்கிறது .அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் என்று தெளிவாக குறிப்பிட்டு பில் வந்தவுடன் தனக்கு கமிஷன் கொடுத்து விட வேண்டும் இல்லை என்றால் நான் கையெழுத்து போட முடியாது என்று மிகவும் கடுமையாக  பேசுகிறார்.


அரசியல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்