புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுகோள்

LOGESH 1 year ago

நாகை மாவட்டத்தில் சுமார் 17,196 ஹெக்டர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டு உள்ள நிலையில் திருக்குறளை சுற்று வட்டார பகுதிகளான முத்தரசபுரம், கொலப்பாடு ,வழிவளம், கொடியாளத்தூர், ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த மழையின் காரணமாக மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் .முன்கூட்டி செய்வதற்கான ஆணையை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற்ற தமிழக அரசு ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்கின்ற வகையில் மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியையும் கேட்டுப் பெறாமல் இருப்பதால் ஈரப்பதம் அதிகம் உள்ள நிலை கொள்முதல் செய்ய முடியவில்லை என்ற காரணத்தை சொல்லி நெல் கொள்முதல் நிலையங்கள் காலதாமதம் செய்து வருகின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் கடைபிடித்ததை போல் மழையில் நெற்பயிர்கள் நனைந்து வீணாவதை தடுக்கும் விதத்தில் விவசாயிகளிடமிருந்து எந்தவித கால தாமதம் இன்றி நெல்லை கொள்முதல் செய்து இருப்பு வைக்காமல் உடனடியாக  எடுத்து அரிசியை வினியோகம் செய்வதன் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் வீணாவதை தடுக்க முடியும் என்பதையும் இந்நேரத்தின் இந்த ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


அரசியல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்